அமலாவின் அன்பளிப்பு



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         சவால் காதல்

“இரண்டரை மணி நேரம் மட்டும் நடக்கும் சம்பவத்தை சித்தரிக்கும் படம்தான் பிதா மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘வெற்றிப்படி’. கதாநாயகி தனது தந்தையிடமிருந்து காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து தப்பித்து, காலை 10.30 மணிக்குள் காதலன் கரத்தை பிடிக்கிறார். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று பெற்றோரிடம் சவால் விடும் நாயகி, காதலனை எப்படி கைப்பிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன். நாயகனாக விஜயதாஸ் நடிக்கிறார். நாயகியாக எஸ்தர் ஜாய் நடிக்கிறார். வில்லனாக முத்துக்குமார் நடிக்கிறார். இரண்டரை மணி நேர சம்பவத்தை இரண்டரை மணி நேரத்தில் காண்பிக்க வேண்டும் என்ற சவாலுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளேன்” என்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான விஜய தாஸ்.

‘ராஜபாட்டை’ எடிட்டர் மு.காசிவிஸ்வ நாதன் சொந்தமாக எடிட்டிங் ஸ்டூடியோ வைத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்  தன்னுடைய அலு வலகத்துக்கு லட்டு என்று பெயர் வைத்துள்ளார்.

நட்பின் பெருமை
“காதலர்களுக்கு இடையில் காதலன் இறந்தால் காதல் இறப்பதில்லை.  நண்பர்களுக்கு இடையில் நண்பன் இறந்தால் நட்பு இறப்பதில்லை என்ற  கருத்துதான் ஷீரடி சாய் ஸ்க்ரீன்ஸ் முருகேசன், சாய்ராம் தயாரிக்கும் ‘முத்துப்பேச்சி’ படத்தின் கதை. நாயகனாக அருண்ராஜ் நடிக்கிறார். நாயகியாக  லாவண்யா நடிக்கிறார். வில்லனாக புதுமுகம் மணிகண்டன் நடிக்கிறார். பசுபதி, ஆசிஷ் வித்தியார்த்தியை ஞாபகப்படுத்துமளவுக்கு இவருடைய நடிப்பு இருக்கும். தயாரிப்பாளர் முருகேசன் கதைக்கு திருப்புமுனை  தரக்கூடிய வேடத்தில் நடித்துள்ளார்.

நட்பின் பெருமை சொல்லும் இந்தப் படம் வெளியானதும் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை நினைத்துப் பார்ப்பார்கள்” என்கிறார் இயக்குனர் சாய்ராம்.

தன்னுடைய மேக்கப் உதவியாளர் களுக்கு தீபாவளி போனஸாக பெருந்தொகை கொடுத்துள்ள ராம் அமலா பால்.