சமீராவுக்கு பிடித்த ஐட்டம்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

      எல்.ஆர். ஈஸ்வரி எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்? அவரால் எப்படி எப்போதும் பட்டுப்புடவையிலேயே  வலம் வர முடிகிறது?
 எஸ்.பாபு, திண்டுக்கல்

30 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். 1958&ல் கே.வி.மகாதேவன் இசையில் ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தில் ‘அவரே தான் இவரு, இவரேதான் அவரு...’ என்ற பாடலைப் பாடி அறிமுகம் ஆனார். அந்தப¢ பாடலுக்கு அவருக்கு கிடைத்த சம்பளம் 50 ரூபாய். ‘நம்நாடு’ படத்தில் அவர் பாடிய ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன்...’ பாடலுக்காக ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது.

இவரது பக்திப் பாடல்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பரிசாக அனுப்பிய பட்டுப்புடவைகள் ஈஸ்வரியிடம் ஏராளமாக உள்ளன. அது தவிர பல கோவில்களைச் சேர்ந்த பக்தர்களும் பட்டுப்புடவைகளை அனுப்பி வைக்கிறார்கள். ‘தாயே கருமாரி...’ உள்பட பல அம்மன் பாடல்களால் புகழடைந்த எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு கிறிஸ்தவர். அவரது இயற்பெயர் லூர்துமேரி ராஜேஸ்வரி. அதன் சுருக்கம்தான் எல்.ஆர்.ஈஸ்வரி.

எங்கள் இளைய தளபதி நடிக்கும் ‘யோகன்& அத்தியாயம் ஒன்று’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் யார்?
 என்.பாபுவிஜய், விருத்தசாலம்

சமீராரெட்டி என்று சொல்லப்பட்டது. இப்போதைக்கு யாரையும் முடிவு செய்யவில்லை என்கிறார் அந்தப் படத்தின இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

சமீரா ரெட்டியின் உடல்வாகுக்கு ஐட்டம் சாங் ஆடினால் சூப்பராக இருக்கும். ஆடுவாரா?
 கே.கோபால், திருவல்லிக்கேணி

“ஒரு படத்தின் வெற்றிக்கு ஐட்டம் சாங் பெரிதும் உதவும். தொலைக்காட்சிகளில் அடிக்கடி அந்தப்பாடல் ஒளிபரப்பாகும். எனவே ரசிகர்களுக்கு நமது முகம் நினைவில் நிலைக்கும்.” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சமீராரெட்டி. எனவே உங்களது ஆசை விரைவில் நிறைவேறலாம்.

சார்மி நடித்த முதல் படம் எது சிபி?
 எம்.கே. பிரகாஷ், காரைக்குடி

‘நீ தொடு காவாலி’ என்ற தெலுங்குப் படத்தில் 2002&ல் அறிமுகமானார். அந்தப்படத்தில் குடும்பத்தலைவியாக நடித்த அவருக்கு அப்போது வயது 15.

மலையாளம் தவிர, பாவனாவுக்கு என்னென்ன மொழிகள் தெரியும்?
வீ.பிரபாகர், மதுரை

ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் சரளமாகப் பேசுவார்.

எமதர்மராஜா கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் யார்?
எஸ்.சிவபுண்ணியம், திருச்சி

வினுசக்கரவர்த்தி, பாண்டு, தியாகு ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள்.