தொடர்பு எல்லைக்கு அப்பால் அஞ்சலி!



‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ படங்களைத் தொடர்ந்து விமல் ஜோடியாக ‘மாப்ள சிங்கம்’ படத்தில் நடிக்கும் அஞ்சலி, அடுத்த மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் தங்குவது ஐதராபாத்தில்.

செல் நம்பரை யாருக்கும் தருவது இல்லை. உடன் நடிக்கும் ஹீரோ கூட, உதவியாளர் மூலமாக மட்டுமே அஞ்சலியிடம் பேச முடியுமாம். மீடியாக்கள் தொடர்புகொள்வதற்காக கொடுத்த இ-மெயில் முகவரி யையும் மாற்றிவிட்டார்.