குரல் His Mind Voice



சூதானமா இல்லையின்னா பேக்குல மட்டுமில்ல, முன்னாலயும் முக்கா இஞ்சுக்கு ஆப்பு வச்சு, சொகுசா தூக்கிவச்சு சொந்த ஊருக்கு அனுப்பிவச்சிருவாய்ங்க. இந்த சினுமா பீல்ட பத்தி எங்களுக்குத் தெரியாதாக்கும்?

நாங்க எல்லாம் பட்டன் இல்லாத டவுசர ஒரு கையில புடிச்சிக்கிட்டு, ஒடஞ்சுபோன சிலேட்ட ஒரு கையில தாங்கிக்கிட்டு பள்ளிக்கோடம் போனவிங்க. என்னைக்கு நாம வாத்தியாரக் கண்டு பயந்துருக்கோம். அவருதான் அன்னாடமும் நம்மளக்கண்டு டர்ர்ர்ராயிருக்காரு.

சேந்தாப்புல நாலு பொராட்டா திங்கிறதுக்கு நாயா பேயா அலைஞ்சிருக்கோம். ஒரே ஒரு படத்துல அம்பது பொராட்டா திங்கிற மாதிரி சீன் வந்தாலும் வந்துச்சு, நம்ம கால்ஷீட்டும் கல்லாவும் புல்லா ஆயிக்கிட்டு வருதுல்ல.

ஆரம்பத்துல லிங்கியும் பனியனுமா குடுத்து, இதுதான் காஸ்ட்யூம்னாங்க. இப்ப நம்ம வச்சதுதன வரிச. சீன்ஸ் பேண்ட் மாட்டிக்கிட்டு அப்பிடியே சிலுப்ப ஆரம்பிச்சுட்டோம்ல. பலபேருக்கு வயித்தெரிச்ச தாங்கல போல, ஹீரோவா நடிக்கவேண்டியதுதானேன்னு உசுப்பேத்திப் பாக்குறாய்ங்க. சிக்கமாட்டோமுடி!

நெல்பா