ரெண்டு லட்சுமியும் இல்லையாம்!



வரலட்சுமியும், விஷாலும் நட்புடன் இருக்கிறார்கள் என்றாலும் விஷால் படத்தில் வரலட்சுமி வராலட்சுமி ஆகிவிட்டார்.   ‘பாண்டிய நாடு’,  ‘நான் சிகப்பு மனிதன்’ படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட விஷால், நெருக்கடி காரணமாக மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க மறுத்து விட்டார்.

‘பாண்டிய நாடு’ டீம் அப்படியே இணைய வேண்டும் என்று ஆசைப்பட்ட இயக்குனர் சுசீந்திரன், மீண்டும் விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பார் என்று அறிவித்தார். அன்றிலிருந்து விஷாலுக்கு நெருக்கடி. எனவே, தடாலடியாக அவரை மாற்றிவிட்டார். இப்போது காஜல் அகர்வால் ஜோடி.    

- தேவா