எல்லாருக்கும் புரியும்!



“ஜப்பானில் மொழி தெரியாமல் தொலைந்து போகும் நாயகன், நாயகி, ஒரு குழந்தை எப்படி மீண்டும் இந்தியா வந்து சேருகிறார்கள் என்பதுதான் ‘ஜம்போ 3டி’ படம்” என்கிறார்கள் ஹரி - ஹரீஷ்.

யெஸ்! ‘அம்புலி 3 டி’ படத்தை எடுத்த அதே இரட்டை இயக்குனர்கள்தான். ஹீரோ கோகுல்நாத். ஹீரோயினாக மாடலிங் துறையில் புகழ் பெற்ற அஞ்சனா நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுகன்யா முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். 90 சதவீத படப்பிடிப்பை ஜப்பானில் படமாக்கியுள்ளார்களாம்.

படத்தில் பெரும்பாலான காட்சி களை மைமிங் 3டி முறையில் உருவாக்கியிருக்கிறார்களாம். இதன் மூலம், உலகத்தில் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், அவர்களும் படத்தை புரிந்து கொள்வார்களாம். ஜப்பானில் தமிழ்ப் படங்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் ஜப்பானிலும் இந்தப் படத்தை வெளியிடஉள்ளார்களாம்.

-எஸ்