பெரிய்...ய்...ய ஆசை



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     “எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தை அடைய ஆசைப்படுவார்கள். அதுபோல் எங்கள் நாயகனும் யாரும் யோசிக்காத ஒரு இடத்தை அடைய ஆசைப்படுகிறார். அதை அடைய அவர் என்னென்ன தடைகளை சந்திக்கிறார் என்பதை ஏவி.எம் சார்பில் எம். சரவணன், எம்.எஸ். குகன் தயாரிக்கும் ‘முதல் இடம்’ படத்தில் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன்’’ என்கிறார் இயக்குனர் குமரன்.

இவர் சுந்தர்.சி, சுராஜ், பூபதி பாண்டியன் ஆகியோரிடம் பணியாற்றியவர். “மகேஷ்வரன் என்ற கேரக்டரில் விதார்த் நடிக்கிறார். அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவியாக கவிதா நாயர் நடிக்கிறார். கீர்த்திசாவ்லாவின் குளுகுளு குத்துப்பாட்டும் இடம் பெறுகிறது.

 இந்தப் படத்துக்காக மிகவும் பழமை வாய்ந்தது போல் ஒரு ராஜராஜன் வளைவு அமைத்தோம். அதைப் பார்த்து தஞ்சை மக்கள் வியந்து பாராட்டியது எங்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி” என்கிறார் இயக்குனர் குமரன்.
ரா