தங்கையை கற்பழித்த கயர்வனை கதாநாயகன் காவு வாங்கும் கதை.புதுமுகம் என்று சொல்லி விட முடியாதளவுக்கு நாயகன் அகிலன் ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என்று எல்லா ரூட்டிலும் பயணித்து ரசிகர் களை தன் பக்கம் இழுக்கிறார்.
நாயகி அனகா வுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் பாடலில் தடம் பதிக்கிறார். மீரா லால் இசையின் பாடல்களும் பிண்ணனி இசையும் இரு தூண்களாக படத்துக்கு பலம் கொடுக்கின்றன. படத்தில் முன்னணி ஹீரோ தான் இல்லை. மற்றபடி ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய எல்லா கமர்ஷியல் அயிட்டங்களையும் சேர்த்து கச்சிதமாக இயக்கியுள்ளார் லாரன்ஸ் மாதவன்.