‘மிஸ்டர் மருமகன்’ மலையாளப் படத்தில் திலீப்புக்கு மாமனாராக நடிக்கிறார் பாக்யராஜ். இவருக்கு ஜோடி ரோஜா.
குருநாதர் பாலு மகேந்திராவை, அப்பா என்றும், அவரது மனைவி அகிலாவை அம்மா என்றும் பாசத்துடன் அழைக்கும் இயக்குநர் பாலா, தனது மகளுக்கு அகிலா என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். ஆனால் அம்மாவின் பெயரை சொல்லி மகளை அழைக்க விரும்பாததால் வேறொரு செல்லப் பெயரில் மகளை கொஞ்சுகிறார்.
பள்ளிபாளையம் சிக்கனும், மதுரை கறிதோசையும் எப்போது கிடைத்தாலும் ருசித்து சாப்பிடுவாராம் கார்த்தி.
‘மாதவனின் அத்தை பெண்ணாக நடிக்கிறாய் என்று ஆசை காட்டி அழைத்தார்கள். ஆனால் சொத்தை கேரக்டரைக் கொடுத்து சொதப்பிவிட்டார்கள்’ என்று ‘மன்மதன் அம்பு’ படக்குழுவைப் பொரிந்து தள்ளுகிறார் ‘களவாணி’ ஓவியா.
‘ஆடுகளம்’ வெற்றிமாறன் லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர். அப்பா டாக்டர் சித்ரவேல் வெட்னரி சயின்டிஸ்ட். அம்மா மேகலா சித்ரவேல் எழுத்தாளர். அக்கா இளவழகி டாக்டராக பணியாற்றுகிறார்.
‘சீதையாக நடிக்கும் ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ தெலுங்குப் படம்தான் என் கடைசி சினிமா’ என்று உறுதியாகச் சொல்லிவருகிறார் நயன்தாரா.
சந்தோஷ் சிவன் இயக்கும் ‘உறுமி’ மூலம் மலையாளத் திரையில் அடியெடுத்து வைக்கிறார் ஜெனிலியா. இதுபோக அவருக்கு இன்னொரு சந்தோஷம். படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட காஸ்ட்யூம்கள் அத்தனையும் கொள்ளை அழகாம்.
நெல்பா