40 வயதைக் தொட்டு விட்ட பூஜா பேடி எகிப்து தேவதையாக ஜூனியர் என்.டி.ஆரின் ‘சக்தி’ படத்தில் நடித்திருக்கிறார்.
சிரஞ்சீவியின் ஹிட் படம் ‘கேங் லீடர்’ ரீமேக் ஆக, அதில் அவரது வாரிசு ராம் சரண் நடிக்கிறார்.
‘கப்பார் சிங்’ படத்தில் பவனுக்கு ஜோடியாக நடிப்பது, தனக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார் சார்மி.
தாசரி நாராயணராவின் ‘பரம்வீரசக்ரா’ நஷ்டமாகியிருப்பதால் நாயகன் பாலகிருஷ்ணா அப்செட்டாகியுள்ளார்.
நல்ல நடிகர் என பெயர் வாங்கிய ரவிதேஜா, சகோதரர்களின் போதைப் பொருள் பிஸினஸால் இமேஜ் கெட்டுப் போயிருக்காராம்.
நாயகிக்கு முக்கியமுள்ள கதை தேடுவதில் ‘அருந்ததி’ மாதிரி கதையைத் தேடத் துவங்கியுள்ளார் சிநேகா.
பவனுடன் விஷ்ணு இணையும் ‘டபுள்’ ஹீரோ சப்ஜெக்டின் ஷூட்டிங் மார்ச்சில் தொடங்குகிறது.
ஸ்ருதி ஹாசனின் இரண்டாவது தெலுங்குப் படமான ‘தி பிஸினஸ் மேன்’ மே மாதத்தில் துவங்குகிறது.
‘தீரா’ என மலையாளத்தில் டப்பாகியுள்ள ‘மகதீரா’ போஸ்டர்களில் ஹீரோ ராம் சரணோடு அல்லு அர்ஜுனையும் இணைத்துள்ளனர். பப்ளிசிட்டிக்காக இந்த ஏற்பாடாம்.
‘பில்லா’ பட கவர்ச்சியில் ரசிகர் நாடியை எகிற வைத்த அனுஷ்கா, செகன்ட் பார்ட்டில் பிகினி உடைக்கு தயார் என கூறியுள்ளார்.
கிரி