ஹீரோ, ஹீரோயின் காதல் வாழ்க்கையில் ஒரு சம்பவம் மையம் கொள்கிறது. அது என்ன? யாரால்? என்பதுதான் ‘மையம் கொண்டேன்’ படத்தின் கதை. ஜி.ஏ.ஜெ சினிமா நிறுவனம் சார்பில் ஏ.ஞானம் தயாரிக்கும் இந்தப் படத்தை அர்ஜுனராஜா இயக்குகிறார்.
‘‘இந்தப் படத்தை ‘வில்லன் ஸ்பெஷல்’ என்று சொல்லலாம். வின்சென்ட் அசோகன், ரியாஸ்கான், கோட்டா சீனிவாசராவ் என்று நிறைய வில்லன்கள். வின்சென்ட் அசோகனின் நடிப்பும், கெட்அப்பும் புதுசாக இருக்கும். நாயகன் புதுமுகம் திலீப் குமார் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்து பையனாக நடித்திருக்கிறார்.
நாயகியாக ஐதராபாத்தை சேர்ந்த ஷோபனா நாயுடு இன்னொரு நாயகியாக ‘வெளுத்துகட்டு’ பவீனா நடிக்கிறார். கஞ்சா கருப்பு, சுமன் ஷெட்டி மற்றும் பாண்டு கூட்டணியில் காமெடி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ‘பாவாடை’ என்ற கேரக்டரில் கருப்புவின் காமெடி ஹைலைட்டாக இருக்கும். பாவாடைக்கும், கருப்புவுக்கும் உள்ள தொடர்பு தெரியும்போது மகளிர் அமைப்புகள் சண்டைக்கு கூட வரலாம்.
ஹிட் காம்பினேஷனான தினாயுகபாரதி கூட்டணியில் பாடல்கள் ரகளையாக வந்துள்ளன. கேரளாவை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை மீது உள்ள குகைக்குள் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது மிகப்பெரிய அபாயத்தில் சிக்கிக் கொண்டதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள்தான் எங்களை பத்திரமாக மறு கரைக்கு அழைத்து வந்தார்கள். இந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்குகிறது’’ என்கிறார் இயக்குனர் அர்ஜூனராஜா.
ரா