நமீதாவின் ரவுண்டு



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

ஒரு இன்ப அதிர்ச்சி சொல்லுங்கள் சிபி?
எஸ்.குரு ராகவேந்திரன்,
மணலி.

எனக்கு நடந்ததல்ல, அனன்யாவுக்கு நடந்தது, மலையாளத்தில் ‘நந்தனம்’ என்று ஒரு படம் வெளியானது. அந்தப் படத்தின் பாடல்களைப் பாடி, பள்ளிக் கூட விழாக்களில் பல பரிசுகளை வாங்கினார் அனன்யா. அந்தப் படம்தான் ‘சீடன்’ என்ற பெயரில், சுப்ரமணிய சிவா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் தமிழில் வர இருக்கிறது. அந்தப் படத்தின் ஹீரோயின் அனன்யா.

அசின் எதிர்பார்க்கும் தமிழ்ப்படம் எது சிபியாரே?
ஜோ.சந்திரசேகரன்,
தஞ்சாவூர்.

‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ மீண்டும் தூசி தட்டப்பட்டு படப்பிடிப்புக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப்படத்தில் நடிக்க ஆவலோடு தயாராக இருக்கிறாராம் அசின்.

ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படத்தில் இலியானாவுக்கு என்ன கேரக்டர் தலைவா?
கே.சுப்புராஜ்,
ராஜபாளையம்.

அடப்பாவிகளா! ஹீரோக்கள் யார் யார் என்ற பிரச்னைக்கே இப்போதுதான் இறுதி (?) முடிவு தெரிந்திருக்கிறது. அதற்குள் யார் யாருக்கு என்ன கேரக்டர் என்று தெரிந்து கொள்ளத் துடிக்கிறீர்களே! உங்கள் ஆர்வக் கோளாறுக்கு அளவே இல்லையா?

‘இளைஞன்’ படத்தைத் தொடர்ந்து எங்கள் நமீதா ஒரு ரவுண்டு வருவார் என்று நம்புகிறீர்களா?
எஸ்.சுகுமார்,
திருத்தணி.

‘ரவுண்டாக’ வருவதுதான் ரசிகர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. ‘ட்ரம்’ போல இருப்பதை ‘ட்ரிம்’ ஆக்கினால் உங்களது ‘ட்ரிம்’ பலிக்கும் என்பது சிபியின் தாழ்மையான கருத்து.

நடிகைகள் மட்டும் அம்சமாகவும் அழகாகவும் இருக்கிறார்களே, அது எப்படி சிபி?
எம்.நாகரத்தினம்,
திருவிடைமருதூர்.

அம்சமாகவும் அழகாகவும் இருப்பவர்களைத்தான் நடிகைகளாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் கதை நுட்பத்தில் கோட்டை விடுகிறார்களே. நல்ல எழுத்தாளர்களிடம் கதை வாங்கி, படம் எடுக்க வேண்டியது தானே?
எல்.பரத்வாஜ்,
தி.மலை.

‘கமர்ஷியல்’ என்ற வார்த்தை யை சினிமா அகராதி யிலிருந்து அழிக்கும் வாய்ப்பு வருமானால், உங்களைப் போன்றவர்களின் ஏக்கம் தீரும்.