பீட்ரூட் வடை



தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 1 கப், சோம்பு - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, பீட்ருட் துருவல் - 1/2 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன், பட்டை - 1 சிறுதுண்டு.

செய்முறை

வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலை பருப்பை கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைத்து  வடித்து கொள்ளவும். பட்டையை லேசாக இடித்துக்கொள்ளவும். பருப்பு நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் , சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பீட்ரூட் துருவல், மிளகாய்தூள், இடித்த பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.