பீட்ரூட் சூப்தேவையான பொருட்கள்

தக்காளி - 1, பீட்ரூட் - 1 சிறியது, வெங்காயம் - 1/2, பச்சை மிளகாய் - 1, பிரியாணி இலை - 1, சோம்பு - 2 சிட்டிகை, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

தக்காளி, பீட்ரூட், வெங்காயம்,  பச்சைமிளகாய்  ஆகியவற்றை நறுக்கி வாணலியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். பின்னர் வேகவைத்த காய்கறிகளைக் கூழாக அரைத்து, தேவையான நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை வைத்திருக்கவும். பின்னர் மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடவும். (பிரியப்பட்டால் கிரீம் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.)