பீட்ரூட் இனிப்பு அப்பம்



தேவையான பொருட்கள்

ரவை - 1 கப், மைதா - 1 கப், சர்க்கரை - 1 கப், வாழைப்பழம் - 1 சிறியது,
(பூவன், கதலி, நாட்டுபழம்), எண்ணெய் - தேவையான அளவு, பீட்ரூட் சாறு - தேவையான அளவு.

செய்முறை

ரவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூழ்கும் வரை பீட்ரூட் சாறு ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் மைதா, சர்க்கரை, பழம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். பின் எண்ணெயை காய வைத்து , கரண்டியால் மாவை எடுத்து நமக்கு தேவையான அளவில் அப்பங்களாக ஊற்றி எடுக்கவும். விருப்பப்பட்டால் இடித்த பிஸ்தா, முந்திரி தூவி பரிமாறலாம்.