பீட்ரூட் கூட்டு



தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1, வெங்காயம் - 1, மிளகாய்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க: தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன்.

செய்முறை

பீட்ரூட்டை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி 3/4 பதமாக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். பின்னர் மிளகாய்தூள், உப்பு, அரைத்த மசால் சேர்த்து வதக்கி சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் வேகவைத்த பீட்ரூட் சர்த்து சிறு தீயில் வைத்து கெட்டியானதும் இறக்கவும்.