பீட்ரூட் தயிர் பச்சடி



தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, வெங்காயம் - 1.
தாளிக்க: கடுகு - அரை தேக்கரண்டி, எண்ணெய் - ஒரு தேக்கரண்டி.

செய்முறை

பீட்ரூட் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயம், துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்னர் அதில் உப்புச் சேர்த்து வதக்கி  3/4 பதமாக வெந்த பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறிய பின்னர் அதனுடன் தயிரைச் சேர்த்து நன்றாக கலக்கவும். சப்பாத்தி,பூரி, பிரியாணி வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.