பீட்ரூட், சென்னா சாலட்
 தேவையான பொருட்கள்
சென்னா - 1 கப் ( வேக வைத்தது), பீட்ரூட் துருவல் - 1/2 கப், வெங்காயம் - 1, வெள்ளரி - 1/2, பச்சைமிளகாய் - 2, கடுகு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லிதழை - சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், வெள்ளரி,பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து பீட்ரூட் துருவல்,உப்பு சேர்த்து 3/4 பதமாக வேகவைத்து இறக்கவும்.சென்னா,பீட்ரூட் துருவல்,வெங்காயம், வெள்ளரி, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து நன்கு கிளறி மல்லிதழை தூவி பரிமாறவும்.
|