பீட்ரூட் குருமா (Restaurant style)



தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1  கப் (1/4 கப்  நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்), வெங்காயம் - 1 (நறுக்கியது),  தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், வற்றல்தூள் - 2 ஸ்பூன், மல்லித்தூள் - 1ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், மல்லிதழை - 1/2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.அரைக்க : துருவிய தேங்காய் - 1/2 கப், முந்திரி - 4, கசகசா - 1/2 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன். பச்சை மிளகாய் - 2, கிராம்பு - 2, பட்டை - 1/2 இன்ச், ஏலக்காய் - 1, உப்பு-தேவைக்கு.

செய்முறை

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி  நன்கு அரைத்து கொள்ள வேண்டும். காய்கறிகளை உப்பு சேர்த்து பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனைப் போக வதக்கி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்த காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து, குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். அருமையான குருமா தயார்.