பீட்ரூட் ரசம்



தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - 1, புளி - நெல்லி அளவு, மிளகு - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி - 2 டீஸ்பூன், வத்தல் - 3, சீரகம் - 1/2 டீஸ்பூன், பீட்ரூட் சாறு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - 1/2 தேக்கரண்டி, பெருங்காயம் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிதளவு.

செய்முறை

முதலில் துவரம் பருப்பை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். பருப்புடன் தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.புளியை தனியாக கரைத்துக்கொள்ளவும். மிளகு, கொத்தமல்லி, 1/2 தேக்கரண்டி சீரகம், வத்தல் இவற்றை வறுத்து தூளாக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்  தாளித்து தூள் செய்த பொடி சேர்க்கவும். பின்னர் பருப்பு, தக்காளி கலவையை சேர்க்கவும், புளிக்கரைசல், பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு நுரைகூடியதும் இறக்கவும். பரிமாறும் பாத்திரத்தில் உப்பு, மல்லித்தழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.