பீட்ரூட் போண்டாதேவையான பொருட்கள்

பீட்ரூட் துருவல் - 1 கப், உருளைக்கிழங்கு - 2, நறுக்கிய வெங்காயம்- 1/4 கப், நறுக்கிய பச்சை மிளகாய்  - 1 டீஸ்பூன், கடலைமாவு - 1 கப், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

உருளைக்கிழங்கை குக்கரில் மசிய வேகவைத்து எடுக்கவும். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பீட்ரூட் துருவல் சேர்த்து நன்கு கட்டியாக பிசைந்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். கடலை மாவில்,வற்றல்தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். பீட்ரூட் கலவையை  சிறிய  உருண்டைகளாக உருட்டி கடலை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.