பீட்ரூட் புட்டு



தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு - 1 கப், உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - 1/4 கப், பீட்ரூட் சாறு - தேவையான அளவு.

செய்முறை

பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும். பீட்ரூட் சாறு பரவலாக தெளித்து நன்கு விரவிக் கொள்ளவும். கையில் பிடிக்கும் பதமாக இருக்க வேண்டும்.10 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். குழாய் புட்டு குழலில் முதலில் 1 டீஸ்பூன் தேங்காய் துருவல்,பின்னர் 4 டீஸ்பூன் புட்டு மாவு, 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் ,4 டீஸ்பூன் புட்டு மாவு ,1 டீஸ்பூன் தேங்காய் துருவல் என அடுக்காக வைத்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.நாட்டு சர்க்கரை அல்லது ஏதாவது கிரேவியுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.குழாய் புட்டிற்கு பதிலாக இட்லி தட்டிலும் வேக வைக்கலாம்.