பீட்ரூட் பிரியாணிதேவையான பொருட்கள்

பீட்ரூட் - ஒன்று, சீரக சம்பா அரிசி - ஒரு கப், கொத்தமல்லி இலை, புதினா இலை - 1 கப், பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, தக்காளி - 1, சீரகத்தூள் - 1 டீஸ்பூன், சோம்பு - 1/2  டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 3, நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்.

செய்முறை

அரிசியை நன்றாகக் கழுவி 15 நிமிடம் ஊறவைத்து வடித்து வைக்கவும். பீட்ரூட்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி கொள்ளவும்.

பின்னர்  இஞ்சி  பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கி கொள்ளவும். அதில் 11/2 கப் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்த பின் இறக்கவும். சுவையான சத்தான  பீட்ரூட் பிரியாணி தயார்.