பீட்ரூட் பிர்னிதேவையான பொருட்கள்

ரவை - 1 கப், பால் - 3 கப், சர்க்கரை - 1 1/2 கப், பீட்ரூட்  - 1/2, நெய் -  2 டேபிள் ஸ்பூன், முந்திரி, பிஸ்தா - 11/2 டீஸ்பூன்.

செய்முறை

வாணலியில் ரவையை வறுத்து தண்ணீரில் வேகவைக்கவும். 3/4 பாகம் வெந்தபின்னர் பால் சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு கொதித்த பின்னர் சர்க்கரை, நெய் சேர்த்து 6-8  நிமிடங்கள் வைத்திருக்கவும். பீட்ரூட்டை சுத்தம் செய்து 1/4 கப் பாலில் வேகவைத்து  நன்கு விழுதாக அரைத்து பிர்னியில் சேர்க்கவும். பிர்னி கொதித்த பின்னர் இறக்கிவிடவும். முந்திரி, பிஸ்தா லேசாக இடித்து பிர்னியில் கலந்து பரிமாறவும்.