பீட்ரூட் தோரன்



தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2 ( துருவியது), வெங்காயம் - 1 (நறுக்கியது),  பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது), துருவிய தேங்காய் - 1/2 கப், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிவக்கும் வரை வதக்கி கொள்ள வேண்டும். பின்னர்  பீட்ரூட் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் பீட்ரூட்டை நன்கு வேக வைக்க வேண்டும். பீட்ரூட் 3/4 பதமாக  வெந்ததும், அதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, உப்பு தூவி, நன்கு கிளறி விட வேண்டும். சிறு தீயில் 3-5 நிமிடம் மூடி வைத்து, நன்கு கிளறி  இறக்கவும்.