எம்பாண்டாஸ்



மேல் மாவு செய்ய தேவையான பொருட்கள்

மைதா - 3 கப், உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 2 டீஸ்பூன், முட்டை - 1,
வெண்ணெய் - 1/2 கப், சிக்கன் ஸ்டாக்  - 3/4 கப்.

பில்லிங் செய்ய தேவையான பொருட்கள்

ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன், சிக்கன் கைமா - 1/2 கிலோ, தக்காளி விழுது - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, வினிகர் - 2 டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன், வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், பூண்டு பல் - 5 அரைத்தது, ஆரிகானோ - 1 டீஸ்பூன், குடைமிளகாய் (சிகப்பு, பச்சை தலா) - 1 (பொடியாக நறுக்கியது), எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையையும், சிக்கன் ஸ்டாக்கையும் நன்கு கலந்து மாவில் ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு  போல் பிசைந்து நன்றாக மூடி ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் கைமா, உப்பையும் சேர்த்து வேக வைக்கவும்.

பின் இதை தனியாக எடுத்து வைக்கவும். இதே கடாயில் மறுபடியும் எண்ணெய் ஊற்றி தக்காளி விழுது, வினிகர், சீரகத்தூள், வரமிளகாய்த்தூள், பூண்டு, ஆரிகானோ, வெங்காயம், குடைமிளகாய், உப்பு ஆகியவற்றை நன்கு வதக்கி பின் அதில் சிக்கன் கலவையை சேர்த்து கிளறி இறக்கவும். ஃபிரிட்ஜில் உள்ள மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து அதை வட்டமாக தேய்த்து நடுவில் சிக்கன் கலவையை வைத்து அதை மூடி ஒரு தட்டில் அடுக்கி மறுபடியும் ஃபிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எண்ணையில் பொரிக்கவும். சூடாக
மயோனஸ் உடன் பரிமாறவும்.