பீனட் பட்டர்



தேவையான பொருட்கள்

வறுத்த நிலக்கடலை - 2 கப், பொடியாக நறுக்கிய நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தேன் - 2 டேபிள் ஸ்பூன் (தேவையெனில்), கோகோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை பொடி - 1 பின்ச், சாக்லெட் சிப்ஸ் - 1 கைப்பிடி, நியுடெல்லா (Nutella) - 2 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு மிக்சி ஜாரில் வறுத்த கடலையை (கொஞ்சம் சூடாக இருந்தால் நல்லது) 1 நிமிடம் அரைக்கவும். பின் ஸ்பூன் கொண்டு ஓரத்தில் உள்ள நிலக்கடலையை உள்ளே தள்ளி மறுபடியும் 1 நிமிடம் அரைக்கவும். இந்த விழுது நன்கு அரைந்த உடன் அதில் எண்ணெய், உப்பு, தேன், கோகோ பவுடர், பட்டை பொடி, நியுடெல்லா, நிலக்கடலையை போட்டு கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு வைக்கவும். இது காலையில் பிரட்டில் தடவி சாப்பிட குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.