பிளினி



தேவையான பொருட்கள்

பகவீட்  மாவு (மரக்கோதுமை) - 1/2 கப், கோதுமை மாவு - 1/2 கப், ஈஸ்ட் - 1 டீஸ்பூன், பால் -  1½ கப், (மிதமான சூட்டில் இருக்க வேண்டும்), சர்க்கரை - 1 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, வெண்ணெய் உருக்கியது - 2 டேபிள் ஸ்பூன் / 1 டீஸ்பூன், முட்டை - 2 (வெள்ளை, மஞ்சள் கருவை பிரித்து வைக்கவும்), கெட்டித்தயிர் + 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 கப்.

செய்முறை

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவையும், உப்பையும் கலந்து வைக்கவும். ஈஸ்ட் பொங்கிய பிறகு இதை மாவு கலவையில் சேர்த்து கிளறவும் (கட்டியில்லாமல்). இது மிகவும் திக்காக இருக்கும். பின் இதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்து 2-3 மணி நேரம் மூடி வைத்து, பின்னர் அதை எடுத்து அதில் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலக்கவும்.

இதற்குள் முட்டையின் வெள்ளை கருவை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். பின் இதை மேலே உள்ள கலவையில் மெதுவாக கலக்கவும். பின் தோசைக்கல்லில் வெண்ணெய் போட்டு மேலே செய்த மாவை தோசை போல் ஊற்றி இரண்டு புறமும் வேக வைத்து எடுத்து கெட்டித்தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி பரிமாறவும்.