ஹாஷ் பிரவுன்



தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2 (பெரியது), மைதா - 3 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, நெய் (அல்லது) எண்ணெய் - 2 டீஸ்பூன் (உருளைக்கிழங்கை வதக்க), எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு, வெங்காய பொடி - 1 டீஸ்பூன் (தேவையெனில்), செடார் சீஸ் (optional) - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து துருவி அதை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து அதை வடிகட்டி வைக்கவும். பின் அதை ஒரு கடாயில் 2  டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இந்த கலவை ஆறிய பின் அதில் உப்பு, மைதா, மிளகுத்தூள், வரமிளகாய்த்தூள், செடார் சீஸ், வெங்காய பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கட்லெட் போல் தட்டி (முக்கோண வடிவம்) குறைவான எண்ணெயில் இரண்டு பக்கமும் வேக வைத்து சூடாக சாஸுடன் பரிமாறவும். இது காலை உணவுக்கு உகந்தது.