சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ்



தேவையான பொருட்கள்

வெண்ணெய் (உருக்கியது) - 230 கிராம், நாட்டு சர்க்கரை - 220 கிராம், வெள்ளை சர்க்கரை - 200 கிராம், முட்டை - 2 (பெரியது), பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், சாக்லெட் சிப்ஸ் - 300 கிராம், மைதா - 300 கிராம்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், நாட்டு சர்க்கரை மற்றும் வெள்ளை சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். பின் அதில் முட்டை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். பின் அதில் மைதாவை சேர்த்து கலக்கவும். கடைசியாக சாக்லெட் சிப்ஸை சேர்த்து கிளறி ஒரு குழிக்கரண்டியில் எடுத்து பேக்கிங் சீட் போடப்பட்ட பேக்கிங் டிரேவில் இடைவெளி விட்டு வைக்கவும்.

பின் இதை பிரீ-ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 150 டிகிரியில் 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்து ஆறியதும் பரிமாறவும். இந்த குக்கீஸை ஒரு கண்ணாடி குடுவை காற்றில் புகாமல் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு உண்ணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் குக்கீஸ் இது.