மேரிலாண்ட் கிராப் கேக்



தேவையான பொருட்கள்

வேக வைத்த நண்டின் சதை - 1 கப், ரொட்டி தூள் - 1/2 கப், கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு,
முட்டை -1, ேமயனீஸ் - 1 டேபிள் ஸ்பூன், ஹாட் சாஸ் - 1 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நண்டு, ரொட்டி தூள், உப்பு, மிளகுத்தூள், மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டை, ேமயனீஸ், ஹாட் சாஸ் அனைத்தும் நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை நண்டு கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதை கட்லெட் போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.