சிக்கன் பாஸ்தா சாலட்



தேவையான பொருட்கள்

பாஸ்தா - 100 கிராம், ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,  இத்தாலியன் சிசனிங் - 1 டேபிள் ஸ்பூன், செர்ரி தக்காளி - 4 (இரண்டாக நறுக்கவும்), சிக்கன் (எலும்பில்லாதது) - 100 கிராம், (உப்பு, பெப்பர் போட்டு வேக வைத்து, சின்ன சின்னதாக வெட்டி வைக்கவும். மொசரில்லா சீஸ் - 1/4 கப், வெள்ளரிக்காய் - 1 (சின்ன, சின்னதாக வெட்டி வைக்கவும்), மல்லித்தழை - 1 கைப்பிடி.

செய்முறை

முதலில் பாஸ்தாவை தண்ணீரில் உப்பு, எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்து குளிர்நீரில் வடிகட்டி ஆற வைக்கவும். பின் ஒரு அகலமான பாத்திரத்தில், பாஸ்தா மற்றும் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கிளறி பரிமாறவும். இது எளிதில் செய்யக்கூடிய ஒன்று.