மெக்சிகன் கார்ன் சாலட்



தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் - 4 கப் (வேக வைத்தது), ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), மல்லித்தழை - 1 கைப்பிடி (நறுக்கியது), அவகடோ - 1 கப் (நறுக்கியது), எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தயிர் (புளிப்பில்லாத கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், மயோனஸ் - 2 டேபிள் ஸ்பூன், சீஸ் துருவியது - 1/2 கப்.

செய்முறை

ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கார்ன் சேர்த்து 3 t0 5 நிமிடம் வதக்கி அதை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும். கார்ன் ஆறிய பிறகு அதில் குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத்தாள், அவகடோ, எலுமிச்சை சாறு, சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கெட்டித்தயிர், மயோனஸ் மற்றும் துருவிய சீஸ் ஆகியவற்றை கலந்து உப்பு, காரம் சரியா என்று பார்த்து பரிமாறவும்.