புரிட்டோ



தேவையான பொருட்கள்

அரிசி வேக வைத்தது - 2 கப், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை - 1/2 (பொடியாக நறுக்கியது), பூண்டு பல் - 3 to 4 (அரைத்தது), ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன், கருப்பு மொச்சை - 1 கப் (வேக வைத்தது), மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், ஹாட் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு,  மைதா சப்பாத்தி - 2 or 4 தேவைக்கேற்ப.

செய்முறை

ஒரு கடாயில் வடித்த சாதம், எலுமிச்சை சாறு, மல்லித்தழை ஆகியவற்றை கலந்து 1 நிமிடம் சூடுபடுத்தி இறக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தையும், பூண்டையும் சேர்த்து வதக்கவும். பின் இதில் மொச்சை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், ஹாட் சாஸ், சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும். இதை செய்து வைத்துள்ள சப்பாத்தியில் வைத்து, மேலே செய்த சாதத்தையும் வைத்து ேரால் செய்து பரிமாறவும். தேவையெனில் குடைமிளகாய், சீஸ், ஆலிவ்ஸ் இதில் சேர்க்கலாம்.