பவுன்டி



தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் - 2 கப், (கடைகளில் கிடைக்கும்), மில்க் மெய்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 கப், டார்க் சாக்லெட் - 100 கிராம் துருவியது (தேவைக்கேற்ப).

செய்முறை

முதலில் தேங்காய் துருவல் மற்றும் மில்க் மெய்டை கலந்து நமக்குத் தேவையான வடிவங்களில் உருட்டி குளிர்சாதனப்பெட்டியில் 1/2 மணி நேரம் வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதன்மேல் நான்ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும் துருவிய சாக்லெட்டை அதில் போட்டு உருக்கி வைத்துக் கொள்ளவும். பின் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து எடுத்த தேங்காய் கலவையை உருக்கிய சாக்லெட் கலவையில் தொய்த்து எடுத்து ஒரு பட்டர் பேப்பரில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் 10 நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும். வீட்டில் செய்தால் செலவும் குறைவு. ருசியும் அபாரம்.