சிக்கன் ஃபஜிடாஸ்



தேவையான பொருட்கள்

சிக்கன் - 500 கிராம் (எலும்பில்லாதது தோல் நீக்கியது), அவகடோ  - 2 தோல் உரித்து நீள நீளமாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வெங்காயம் - 1 சன்னமாக வெட்டி வைக்கவும். குடைமிளகாய் (சிகப்பு, மஞ்சள், பச்சை) - 3 (நீளமாக, சன்னமாக வெட்டி வைக்கவும்), மல்லித்தழை - 1 கைப்பிடி, வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்,  பூண்டு - 10 பல் (அரைத்தது), எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, ஆயில் - தேவைக்கேற்ப சிக்கன் (பொரிப்பதற்கு).

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, பூண்டு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தழை ஆகியவற்றை கலந்து பின் அதில் சிக்கனை கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் இந்த சிக்கனை எண்ணையில் பொரித்து எடுத்து நீளமாக வெட்டி வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், குடைமிளகாய், சிறிது உப்பு, பெப்பர் தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். ஒரு பெரிய தட்டில் வெட்டி வைத்த சிக்கன், மேலே செய்த வெங்காயம், குடைமிளகாய் மற்றும் வெட்டி வைத்த அவகடோ ஆகியவற்றை கலந்து அப்படியே சாப்பிடலாம். சப்பாத்தியில் நடுவே வைத்தும் சாப்பிடலாம்.