அரேபியன் சிக்கன் மண்டி



தேவையான பொருட்கள்

சிக்கன் எலும்புடன் - 500 கிராம் (1 பெரிய துண்டு), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,  பிரியாணி இலை - 3, நெய் - 1 டீஸ்பூன், ஏலக்காய் - 2, பட்டை - 2,லவங்கம் - 1, மிளகு -  1 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன், ெவண்ணை - 2 டேபிள் ஸ்பூன்,  உப்பு - தேவைக்கு. பாஸ்மதி அரிசி - 2 கப், தண்ணீர் - 4 கப்.

மண்டி பொடி செய்யத் தேவையான பொருட்கள் : ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன், லவங்கம் - 1 டேபிள் ஸ்பூன், முழு மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை - 2.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மண்டிக்கு தேவையான பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கி வைக்கவும். அரிசியை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு, தவாவில் 10-15 நிமிடம் ஆலிவ் ஆயில் ஊற்றி வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்து கிளறவும்.

பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் அதில் சிக்கன், மண்டி பொடி (முக்கால் பாகம் சேர்த்துவிட்டு கால் பாகம் வைக்கவும்) 4 கப் தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வேக வைக்கவும். பின் அதில் உள்ள சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும். இதில் வறுத்த அரிசியினை சேர்த்து நன்கு ேவகவிடவும்.

இந்த வறுத்த அரிசியை மேலே கொதித்துக்கொண்டிருக்கும் மசாலாவை சேர்த்து ேவகவிடவும். வெந்ததும் அதன் நடுவில் ஒரு கிண்ணத்தில் நெய்யை ேசர்த்து, அதில் கறித்துண்டு (Charcoal hot) ஒன்று போட்டு மூடி வைக்கவும். மீதி உள்ள மண்டி பொடி மற்றும் வெண்ைணயை தனியாக வேகவைத்துள்ள சிக்கன் மேல் தடவி oven-ல் 20-25 நிமிடம் பொன்னிறமாக ேவக வைக்கவும். வேகவைத்த அரிசியுடன் சிக்கனை வைத்து சூடாக பரிமாறவும்.