அசத்தலான வெளிநாட்டு சமையல்



கான்டினென்டல், மெக்சிகன், இத்தாலியன் என பல வகை உணவுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு சுவையை தரும். முன்பு மக்கள் தங்கள் பாரம்பரிய உணவினை மட்டுமே புசித்து வந்தனர். ஆனால் இப்போதுள்ள தலைமுறையினர், பல நாட்டு உணவினை ருசிக்க விரும்புகிறார்கள். மேலும் குட்டீஸ்களும் அதே சாம்பார், சட்னி என்றால் முகம் சுளிக்கின்றனர்.

இது போல் வித்தியாசமாக செய்து தரும் போது அவர்களும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள். அயல்நாட்டு உணவினை நம் சமையல் அறையிலேயே எளிதாக சமைக்கலாம் என்கிறார் குன்னூரை சேர்ந்த நித்யா நடராஜன். சமையல் மேல் தனி ஆர்வம் உள்ள இவர் சில காலம் வெளிநாட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள உணவுகளை தன் குழந்தைகளுக்காக சமைக்கவும் கற்றுக் கொண்டுள்ளார்.

இந்த உணவுகளை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை நாம் வீட்டில் இருந்தே எளிமையாக சமைக்கலாம். இப்பொழுதெல்லாம் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அனைத்து நாட்டு உணவுப் பொருட்களும் கிடைக்கிறது. அப்புறம் என்ன நீங்களும் செய்து உங்கள் குழந்தைகளை வெளிநாட்டு உணவுகளை சமைத்து ஆச்சரியப்படுத்துங்கள் தோழிகளே!

தொகுப்பு: ப்ரியா