பாசந்தி



தேவையான பொருட்கள்

பால் - 1 1/2 லிட்டர், சர்க்கரை - 2 கப், அலங்கரிக்க - முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்தது, ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, குங்குமப்பூ - 2.

செய்முறை

பாலை மெல்லிய தீயில் கனமான கடாயில் வைத்து, பொங்க விடாமல் கொதிக்கவிடவும். பொங்கி வரும் போது அவ்வப்போது கரண்டியால் கிளறவும். பால் சுண்டி வரும் போது, ஓரத்தில் படியும் பால் ஆடையை ஓரத்தில் ஒதுக்கிவிட வேண்டும். பால் கெட்டியான பின் சர்க்கரை சேர்க்க வேண்டும். கடைசியில் அனைத்துப் பாலேடும் சேர்ந்தபின் கீழே இறக்கி வைத்து பிஸ்தா, பாதாம், முந்திரி, சாரப்பருப்பு, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து சில்லென்று பரிமாறவும்.