கோதுமை அல்வா



தேவையான பொருட்கள்

கோதுமை -  1/4 கிலோ, ஜவ்வரிசி - 50 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் - 1 டம்ளர், நெய் - 100 கிராம், ஏலக்காய், முந்திரி - சிறிதளவு.

செய்முறை

கோதுமையை சுமார் 3 நாட்களாவது ஊற வைக்கவும். தினமும் தண்ணீர் ஊற்றிக்கொண்டே வரவும். நான்காவது நாள் மீண்டும் கழுவி நன்றாக அரைக்கவும். நிறைய தண்ணீர் சேர்த்து அரைத்து துணியில் வடிகட்டி பால் எடுக்கவும். வடிகட்டின பாலை மெல்லிய துணியால் சில மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு மறுபடியும் வடிகட்டவும். அடியில் தங்கியிருக்கும் வெள்ளைநிற வண்டல்தான் நமக்குத் தேவையானது. பாலை சூடாக்கி, மாவாகப் பொடித்த ஜவ்வரிசியைக் கலந்து, அதையும் கோதுமை வண்டலில் கலக்கவும்.

பாதியளவு நெய்யைச் சூடாக்கி அதையும் இதனுள் கலக்கவும். இப்போது ஒரு (டீஸ்பூன்) தட்டையான கரண்டியால் கைவிடாமல் நன்றாக ஒன்று சேரக் கலந்தபின், அடுப்பின் மேல் ஏற்றிச் சுருள கைவிடாமல் கலக்கவும். பின் சுண்டக்காய்ச்சிய பாலில் (சுமார் 1/2 கப்) சர்க்கரை கலந்து அதையும் கொட்டிக் கிளறவும். இறக்கி கிளற ஒரு பந்துபோல் உருண்டயாக வரும். பாக்கி நெய்யையும் சூடாக்கி முந்திரி வறுத்துப்போட்டு ஏலக்காய தூவி, நன்றாகச் சேர்த்துக் கலக்கி, நெய் தடவிய  தட்டில் கொட்டி  பரத்தவும். ஆறிய பின் துண்டாக்கவும்.

குறிப்பு: சர்க்கரை சேர்க்கும் நேரத்தில் விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சேர்க்கலாம்.