காலாகண்ட்



தேவையான பொருட்கள்

பனீர் - 1 கப், சுண்டக்காய்ச்சிய பால் - 2 கப், (4 கப், பாலை 2 கப் ஆகக் காய்ச்ச வேண்டும்), சர்க்கரை - 1 கப், பிஸ்தா- அலங்கரிக்க.

செய்முறை

சுண்டக்காய்ச்சிய பாலுடன் தயாராக வைத்துள்ள பனீரைக் கலந்து ஒரு கனமான பாத்திரத்தில், மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கலந்து, ஒட்டாமல் உருண்டு வரும்போது, ஒரு தட்டில் கொட்டி, மேலே பரத்தி, சூடாக இருக்கும்போதே மெல்லியதாக நறுக்கிய  பாதாம் தூவவும். பின் பரிமாறவும்.