தேங்காய் பர்பி



தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் - 1 டம்ளர், சர்க்கரை - 1 டம்ளர், தண்ணீர் - 1/2 டம்ளர், நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை

சர்க்கரையையும், தண்ணீரையும் கலந்து அடுப்பில்  வைக்கவும். கொதி வந்தவுடன் சிறிது பால் சேர்த்து மெல்லிய துணியில் வடிகட்டவும். பிறகு மறுபடியும் ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும். அதில் தேங்காய் துருவலைப் போட்டுக் கிளறவும். ஏலக்காய் பொடி தூவி, சுருள வந்தவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும். இறுகியவுடன் தேவையான வடிவத்தில் வெட்டவும்.