பூந்தி லட்டு



தேவையான பொருட்கள்

கடலை மாவு - 2 கப், அரிசி மாவு  - 3/4 கப், சூடான எண்ணெய் - 1/4 கரண்டி, சோடா உப்பு - 1 சிட்டிகை.
இவை அனைத்தையும் தண்ணீருடன் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை

பூந்தி தட்டு என்று கடைகளில் விற்கும். இந்தக் கரண்டியினுள்  கலந்த மாவை சிறிதளவு கொட்டி, கரண்டியை சூடான  எண்ணெயின் நேர் எதிரில் வைத்துக்கொண்டு, கரண்டி காம்பை இன்னொரு கரண்டியால் தட்டினால், எண்ணெயினுள் முத்து முத்தாக விழும். இதனை பொன்னிறமா பொரித்து ஒரு வடி கூடையில் போட்டு வைக்கவும்.

இப்போது சர்க்கரையையும், தண்ணீரையும் கலந்து அடுப்பின் மேல் வைத்து பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்க விடவும். சிறிதளவு ஏலக்காய், குங்குமப்பூ தூவி, கீழே இறக்கி விடவும். பொரிந்த பூந்திகளில் சிறிதளவு எடுத்து ஒரு துளையுள்ள தட்டின் மேலே பரத்தி சூடான சர்க்கரைப் பாகை ஊற்றவும். மீதி கீழே வடிந்துவிடும். முந்திரி, திராட்சை தூவி, பிசுபிசுப்பாக, சூடாக இருக்கும்போதே லட்டை உருட்டவும். பாகில் நீண்ட நேரம்
ஊற விட வேண்டாம்.