அத்திப்பழ கப்ஸ்



தேவையான பொருட்கள்

முந்திரிப்பருப்பு - 100 கிராம் (பொடித்தது), லிக்விட் குளுக்கோஸ் (Liquid Glucose) - 1/2 டீஸ்பூன், பொடிக்காத சர்க்கரை - 200 கிராம், தண்ணீர் - 1 டம்ளர், பொடியாக நறுக்கிய அத்திப்பழம் - 1 கப்.

செய்முறை

சர்க்கரையையும், தண்ணீரையும் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு செய்யவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் பொடித்த முந்திரியையும், சேர்த்துக் கிளறவும். Liquid Glucose-ஐ சிறிதளவு தண்ணீரில் கரைத்து இத்துடன் கலந்து கிளறவும். தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன் கீழே இறக்கி வைத்து, ஒரு தட்டில் கொட்டி, ஆறவிடவும். ஆறியபின், சப்பாத்தி மாவு போல வந்துவிடும். நன்றாகப் பிசையவும். மிகவும் அழுத்த வேண்டாம். சிறு சிறு கப் வடிவமாக செய்து, அத்தடன் அத்திப்பழத்தை அடைத்து உருட்டிக்கொள்ளவும். நன்றாகக் காய்ந்தபின், நடுவில் வெட்டி கப்ஸ் ரெடி செய்து பரிமாறவும்.