பாதாம் பூரி



தேவையான பொருட்கள்

மைதா - 300 கிராம், பாதாம் பேஸ்ட் - 100 கிராம், பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு, சர்க்கரை - 1 கப், தண்ணீர் - 2 கப், அலங்கரிக்க - குங்குமப்பூ, பாதாம், முந்திரி, நெய் - 1/2 கப், அரிசி மாவு - 1/4 கப், சோடா மாவு - 1 சிட்டிகை.

செய்முறை

மைதாவைச் சலித்து ஒரு தாம்பாளத்தில் போட்டுக்கொள்ளவும். அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். நெய், அரிசிமாவு மற்றும்  ஒரு சிட்டிகை சோடா மாவை கலந்து நுரைக்க அடித்துக்கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வட்ட வட்டமாக (மெல்லிய அப்பளங்களாக) இட்டுக் கொள்ளவும். பின் ஒவ்வொரு வட்டத்தின் மேலும் செய்து வைத்துள்ள நெய், அரிசி மாவு கலவையைத் தடவவும். அதன்மேல் இன்னொரு வட்டத்தை வைக்கவும்.

இவ்வாறு வைத்த வட்டங்களை மறுபடியும் ரோல் போல் சுருட்டி வில்லைகளாக கத்தியால் ஸ்லைஸ் செய்யவும். பிறகு அவைகளை, சப்பாத்திக் கல்லின் மேல் வைத்து, சிறு சிறு வட்டங்களாக திரட்டி, எண்ணெயில் பொரிக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும். திக்கான பதம் வந்தவுடன் பொரித்த பூரியை சர்க்கரை பாகில் முக்கி முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.