குலாப்ஜாமூன்



தேவையான பொருட்கள்

மைதா - 100 கிராம், கோவா - 300 கிராம், பொரிக்க எண்ணெய் - 1/2 கிலோ.
சர்க்கரை பாகு செய்ய: சர்க்கரை - 4 கப், தண்ணீர் - 2 கப்.

செய்முறை

சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும். பிசுக்குப் பதம் வந்தவுடன், கீழே இறக்கி வைத்து வடிகட்டி ரெடியாக வைத்துக்கொள்ளவும். தாம்பாளத்தில் மைதா, கோவா கலவையைச் சேர்த்துப் பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மிதமான சூட்டில் எண்ணெயில்பொரிக்கவும்.

குறிப்பு: எண்ணெய் மிதமான சூட்டில் இல்லாவிட்டால் குலாப்ஜாமூன் கருகிவிடும். உள்ளே வேகாது.  பொரித்த உடனேயே சர்க்கரைப்பாகில் போட வேண்டும். சர்க்கரை பாகு சூடாக இருக்க வேண்டும்.