ஜிலேபி



தேவையான பொருட்கள்

மைதா - 4 கப், தண்ணீர் - 2 கப், ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை. இவை அனைத்தையும் தோசை மாவு பதத்திற்குக் கலந்து சில மணி நேரம் வைத்துப் புளிக்க வைக்கவும்.சர்க்கரைப் பாகு சர்க்கரை - 2 கப், தண்ணீர் - 1 கப்.இரண்டையும் கலந்து கொதிக்க வைத்துப் பின் பிசுக்கு பதத்தில் கீழே இறக்கி வைக்கவும்.

செய்முறை

அடுப்பில் தட்டையான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிச் சுட வைக்கவும். தயாராக வைத்துள்ள ஜிலேபி மிக்ஸை, ஜிலேபி பிழியும் துணியில் போட்டு வட்ட வட்டமாகப் பிழியவும். இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாகப் பொரித்தபின் சர்க்கரைப்பாகில் சூட்டோடு முக்கி எடுக்கவும். சிறிது நேரம் ஊறிய பின் பாகிலிருந்து எடுத்து தனியே வைத்து பரிமாறவும்.