பால் பாயசம்



தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 மேசைக்கரண்டி, நெய் - 2 டீஸ்பூன், பால் - 4 கப், சீனி -  1/4 கப், குங்குமப்பூ - சிறிது, முந்திரி, கிஸ்மிஸ் - தலா 10, ஏலக்காய்
பொடி - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ்ஸை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் அரிசியை வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியை பாலில் ஒரு குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ வேக வைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் சீனி சேர்த்து அது கரையும் வரை நன்கு கிளறவும்.

பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். அரிசியை வேக வைக்கும்ெபாழுது அடுப்பை குறைத்து வைத்து வேக வைக்கவும்.