உளுந்து பூரண கொழுக்கட்டைதேவையான பொருட்கள்

மேல் மாவிற்கு: அரிசி மாவு - 1 கப், தண்ணீர் - 1¼ கப், உப்பு - 1 சிட்டிகை, நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
பூரணத்திற்கு: உளுந்து - 1/2 கப், பச்சை மிளகாய் - 2, பெருங்காயம் -
2 சிட்டிகை, உப்பு - தேவைக்கு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு -  1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை

அரிசி மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்துடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதில் உதிர்த்து வைத்துள்ள உளுந்தம் பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். மேல் மாவை கிண்ணம்போல செய்து அதில் உளுந்து பூரணத்தை வைத்து கொழுக்கட்டைகள் செய்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.