எள்ளுருண்டை
தேவையான பொருட்கள்
வெள்ளை எள் - 1 கப், வெல்லம் - 1/4 கப், ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்.
செய்முறை
வெள்ளை எள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் நன்றாகப் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். அடுப்பை குறைத்து வைத்து வறுக்கவும். ஆறியவுடன் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு விட்டு அரைக்கவும். அரைத்த எள்ளை ஒரு தட்டில் கொட்டி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
|